தூரத்திலிருந்து காதலிக்கிறேன்.. அந்த எண்ணம் இல்லை!! முன்னாள் கணவர் குறித்து நடிகை நளினி
நடிகை நளினி
தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நளினி. ஒரே வருடத்தில் இவர் நடிப்பில் 24 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது, அந்த அளவிற்கு ஒரு காலத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்திருக்கிறார்.
அந்த நேரத்தில் நடிகர் ராமராஜனை காதலிக்க இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 1987ம் ஆண்டு படு கோலாகலமாக இவர்களது திருமணம் பிரபலங்கள் சூழ நடந்துள்ளது.
இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர். நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் திருமண வாழ்க்கை13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
நளினி நெகிழ்ச்சி
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தன் முன்னாள் கணவர் குறித்து சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார். அதில், "நீங்களும் ராமராஜனும் மீண்டும் ஏன் சேரக்கூடாது என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.
ஆனால், அது குறித்த எண்ணம் எங்களுக்கு இல்லை. அதேசமயம் அவரை நான் தூரத்திலிருந்து காதலிக்கிறேன். இதுவும் நன்றாக தான் உள்ளது, என்னால் அவரை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. அது போல்தான் அவரும் என்னை எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டார்" என்று கூறியுள்ளார்.