ரெட்ரோ படத்தில் நடிக்க இந்த பிளாப் படம் தான் காரணம்.. மனம் திறந்த நடிகை
பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்த காரணத்தினால் தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பூஜா.
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முக்கிய நடிகையாக வலம் வந்தார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது தளபதி விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இது தான் காரணம்
இந்நிலையில், பூஜா அவருக்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைத்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " என் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் படத்தில் குறிப்பிட்ட காட்சியில் எனது நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆகிதான் எனக்கு கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ பட வாய்ப்பை கொடுத்தார்.
ராதே ஷியாம் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தாலும் அப்படம் மூலம் எனக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான ஒரு விஷயம்" என பூஜா தெரிவித்துள்ளார்.