தமிழில் பேச மாட்டேன்.. நடிகை மடோனாவா இப்படி சொன்னார்
மடோனா செபாஸ்டியன்
பிரேமம் படத்தில் செலைன் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்.
அப்படியே தமிழில் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் அறிமுகமானர் தொடர்ந்து கவண், பா.பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும், லியோ என தொடர்ந்து நடித்தார்.
மலையாளம் மற்றும் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.
மடோனா பதில்
இந்நிலையில், சமீபத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் பேட்டி ஒன்றில், தமிழ் மொழி குறித்து மிகவும் வெளிப்படையாக பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும். எனக்கு தமிழ் மொழி மீது அளவற்ற பாசம் இருக்கிறது. அதனால் தான் நான் தமிழ் அதிகமாக பேச மாட்டேன்.
அப்படி பேசினால் கரெக்டாக பேசணும் என்று நினைப்பேன். அது தப்பாகிவிடக் கூடாதுன்னு நான் என்னை கண்ட்ரோல் பண்ணிப்பேன். தமிழ் மொழி இசை போன்றது, அழகான மொழி" என கூறியுள்ளார்.