ஜோடி போட்ட ஒரே படத்தில் காணாமல் போன நடிகைகள்! தல காதலித்த நடிகையுமா?
சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லையென்றால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இதனால் படவாய்ப்பின்றி அடையாளம் தெரியாமல் போய் விடுவார்கள்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் மட்டும் ஹிட் கொடுத்து நடித்துவிட்டு காணாமல் போன நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம்.
நடிகை ரியா சென் - 90களில் காதல் படங்கள் அதிகமாக வெளியானது. அதில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் தாஜ்மஹால். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரியா சென் நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் இப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ரியா சென் பாலிவுட் பக்கம் சென்று செட்டில் ஆகிவிட்டார். தற்போது இணையத்தில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
நடிகை பிரியா கில் - தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்தின் ரெட் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா கில். தெலுங்கு, இந்தி படங்களில் அறிமுகமாகி தமிழில் நடித்து கொடி கட்டி பறப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இன்று வரை அமையவில்லை. பின் சினிமாவில் இருந்து 2006ல் இருந்து விலகி காணாமல் போய்விட்டார்.
ரிங்கி கன்னா - நடிகர் பிரஷாந்தின் மஞ்சுனு படத்தின் மூலம் அறிமுகமாகினார். தமிழ் பேசப்பட்ட நடிகையாக இருந்த இவர் படவாய்ப்புகள் கிடைக்காமல் 2003ல் திருமணம் செய்து செட்டிலானார்.
நடிகை மானு - காதல் மன்னன் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக சென்சேஷ்னலாக நடித்திருப்பார் நடிகை மானு. பின் வாய்ப்புகள் கிடைக்காமல் மும்பையில் செட்டில் ஆகினார். சமீபத்தில் தல அஜித்தை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.
மோனிகா காஸ்டெல்னோ - நடிகர் விஜய்யின் மின்சார கண்ணா படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை மோனிகா. பெரிய ஹிட் கொடுத்த முதல் படத்தால் கொடிகட்டி பறப்பார் என்று எதிர்ப்பார்த்தனர்.