பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவிற்கு முன்னதாக நடித்தவர் இந்த நடிகையா? வைரலாகும் புகைப்படம்..

Pandian Stores photo meena kavitha
By Kanagasooriyam Apr 11, 2021 06:50 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

Report

தொலைக்காட்சி தொடர்களில் மிகவும் பெரிய ஹிட் கொடுத்து வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப உறவுகளை பற்றியும் அண்ணன் தம்பி பாசத்தை பற்றி முன்னிறுத்து ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பல பிரபலங்கள் மாறி மாறி நடித்து வருகிறார்கள். அப்படி முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ராவின் மறைவிற்கு பிறகு சீரியல் நடிகை காவியா நடித்து வருகிறார்.

மேலும் ஜீவாவின் மனைவியாக மீனா கதாபாத்திரம் இருந்து வருகிறது. மீனா கதாபாத்திரத்தில் தற்போது ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். ஹேமாவிற்கு முன்னதாக சீரியலின் ஆரம்பத்தில் பெங்களூர் நடிகை கவிதா கெளடா நடித்திருந்தார்.

மகாபாரதம் தொடரில் நடித்ததன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார். பின் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து விலகினார்.

இதையடுத்து கவிதா கெளடா லக்‌ஷ்மி பிரம்மா சீரியல் தொடரில் நடித்த சந்தன்குமாருடன் நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டு வருகிற மே மாதத்தில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.