தனது ஆசைக்காக அடுத்தவரின் வாழ்க்கையை சீரழிக்கும் ஷங்கரின் மகள் அதிதி!..கதறி அழும் பிரபலம்

Karthi Sivakarthikeyan Shankar Shanmugam Aditi Shankar Maaveeran
By Dhiviyarajan Aug 18, 2023 06:08 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய மகள் அதிதி ஷங்கர் தற்போது ஹீரோயினாக வலம் வருகிறார்.

அதிதி கடந்த 2022 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் அந்த இப்படத்தில் இடம் பெற்றுள்ள மதுரை வீர அழகுல என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

இந்த பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான். ஆனால் சில காரணத்தால் அவரின் குரலில் உருவான பாடலை தூக்கி விட்டு அதிதியை பாட வைத்தனர். இது பெரும் சர்ச்சையானது.

சமீபத்தில் வெளிவந்த மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி நடித்திருந்தார். இப்படத்திலும் வண்ணாரப் பேட்டையில என்ற பாடலை பாடி இருந்தார்.

இந்த பாடலும் பாடகி மீனாட்சி இளையராஜா தான் பாட இருந்தாராம். ஆனால் அவர் பாடிய பாடலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர் பாடவைத்துள்ளனர்

இதனால் மீனாட்சி இளையராஜா, மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், பாடல் வாய்ப்பு இழந்ததை நினைத்து அழுவதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய ஆசைக்காக அடுத்தவரின் வாழ்க்கையை அதிதி சீரழிக்கிறார் என்று சில கருத்து பதிவிட்டு வருகின்றனர்.