நடிகை அதிதி ஷங்கர் நியூ லுக்கில் மிரட்டும் புகைப்படங்கள்..
நடிகை அதிதி ஷங்கர்
மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி - கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.
இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும் தெலுங்கில் பைரவரம் என்ற படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், நியூ லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.