உள்ளே வந்த அப்பா!! சாரி கேட்டதும் கண்கலங்கிய அழுத பிக்பாஸ் 8 விஷால்..
Viral Video
Bigg Boss
Star Vijay
Bigg Boss Tamil 8
By Edward
பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது 79வது நாட்களை தாண்டி விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் ஃபீரிஸ் டாஸ்க் அடிப்படையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர ஆரம்பித்திருக்கிறார்.
விஷால் அப்பா
இன்றைய 3வது பிரமோ வீடியோவில் விஷால் அம்மா உள்ளே வர, அப்பா வரவில்லை என்று விஷால் கேட்டுள்ளார். நீ ஏன் அப்பாக்கிட்ட பேசல...புள்ள பேசலன்னு கஷ்டம் அதனால் வரல என்று விஷாலிடம் அம்மா கூறியிருக்கிறார்.
இதனால் வருத்தப்பட்ட விஷாலுக்கு, அவரின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அப்பா வந்ததும் விஷால் கண்ணீர்விட்டு அழுது எமோஷ்னலாக பேசியிருக்கும் வீடியோ தற்போது அனைவரையும் உருக வைத்திருக்கிறது.