உலக அழகி என்றால் சும்மாவா.. ஐஸ்வர்யா ராய் பாதுகாவலரின் சம்பளம் மட்டும் இவ்வளவா?
ஐஸ்வர்யா ராய்
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். பின் பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு, அங்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் அவ்வப்போது தலைகாட்டி சென்றாலும், இவர் நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இவ்வளவா?
இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று கொடுத்தது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பாதுகாவலர் சிவராஜ் குறித்து சில சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஐஸ்வர்யாவின் பாதுகாவலர் அவரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கூட கலந்து கொண்டாராம்.
அதே போல் ஐஸ்வர்யா ராய்யும் இவரை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா, சிவராஜுக்கு அதிக சம்பளம் கொடுப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் இவர் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.