கிக் ஏத்தும் டைட்டில்!! சொப்பன சுந்தரியாக இதுவரை இல்லாத கிளாமர் களத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான நடிகையாக அறிமுகமாகியது முதல் இன்றுவரை இருக்க எந்த நடிகையாலும் முடியாது. ஒருசில மாற்றங்களை கொண்டு வாய்ப்பிற்காக கிளாமர் ரூட்டில் செல்வார்கள்.
ஆனால் அறிமுகமான படத்தில் இருந்து தற்போது வரை தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது கதைக்கு முக்கியத்துவம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் சரியானமுறையில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், எப்போதும் இல்லாத அளவிற்கு கொஞ்சம் ரூட்டை மாற்றி அமைக்கவுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையும் காந்தக்கண்ணழகி என்ற பேரும் பெற்றவர் நடிகை சில்க் ஸ்மிதா.
அவரின் பையோபிக் கதையை வைத்து தற்போது சொப்பன சுந்தரி என்ற டைட்டிலில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். சில்க் ஸ்மிதா என்றாலே நெருக்கம், கிளாமர், குட்டையாடை என அனைத்திலும் பட்டையை கிளப்புவார்.
அப்படியொரு ரோலில் நடிக்க முழு முடிவோடு நடிக்க காத்திருந்து அதீத கவர்ச்சியை காட்ட தயாராக இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் எகிறப்போகிறது என்று கோலிவுட்டில் கூறி வருகிறார்கள்.