நேற்று ஹட் ரீல்ஸ் போட்ட 25 வயதான பிரபல நடிகை!! அடுத்த நாள் ஓட்டலில் சடலம்!!
சமீபகாலமாக இளம் நடிகைகளிம் மர்மமான மரணம் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அப்படி போஜ்பூரி நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை அகான்ஷா துபே.
ஆல்பம் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அகான்ஷா துபே, படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வாரணாசியில் சோமந்திரா ஹோட்டலில் படக்குழுவினருடன் தங்கிருந்தார்.
இன்று காலை அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததை கவனித்த ஓட்டல் ஊழியர்கள் படக்குழுவினருக்கு தெரியப்படுத்தி அறையை திறந்துள்ளனர். அப்படி பார்த்த போது நடிகை அகான்ஷா துபே தூக்கில் தொங்கியபடி மரணமடைந்துள்ளார்.
25 வயதே ஆன அகான்ஷா துபே போஜ்பூரி திரைப்படத்துறையின் கனவுக்கன்னியாக விளங்கி வந்தவர். 60க்கும் மேற்பட்ட ஆல்பத்தில் நடித்து வந்துள்ளவர் அவர், அமீர் சிங் என்பவரை காதலித்து வந்ததை சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலிசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் வருகிறார்கள். நேற்று ஹாட்டாக ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட அகான்ஷா துபே மரணமடைந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.