பாதுகாத்து வைக்க வேண்டும்.. சீரியல் நடிகை ஆல்யா மானசா ஷாக்கிங் பதிவு!
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சீரியல் நடிகை ஆல்யா மானசா. விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் ராஜா ராணி 2 தொடரிலும் நடித்தார்.
அடுத்து சன் டிவி பக்கம் வந்தவர் இனியா என்ற சீரியலில் நடித்தார். அதன்பின் ஆல்யா மானசா எந்த தொடர் நடிப்பார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாரிஜாதம் தொடரில் காது கேட்காத நபராக நடிக்கிறார்.
உருக்கம்!
இந்நிலையில், பாரிஜாதம் தொடரின் தயாரிப்பாளர் நாராயணன் குறித்து ஆல்யா புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "என்றுமே என் வாழ்வில் நான் பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு புகைப்படம் இது. நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள பாத்திரத்துக்கு என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர் நாராயணனுக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.