கர்ப்பமாக இருக்கும் போது கணவரை ஏமாற்றும் நடிகை அமலா பால்!! வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..

Amala Paul Tamil Actress Actress
By Edward Apr 11, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

கர்ப்பமாக இருக்கும் போது கணவரை ஏமாற்றும் நடிகை அமலா பால்!! வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.. | Actress Amala Paul Cute Video Post With Husband

அதன்பின் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி என்று இருந்த அமலா பால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்களில் நடித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தவர் கடந்த அக்டோபர் மாதம் காதலரை திருமணம் செய்வதாக அறிவித்தார். பின் பிரம்மாண்ட முறையில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 3 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது கையில் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் நடிகர் ப்ரித்திவிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அவர் கூட வாழவே முடியாது சாமி!! வெறுத்துபோய் விவாகரத்து முடிவெடுத்த விஜே அர்ச்சனா.. மகள் செய்த செயல்..

அவர் கூட வாழவே முடியாது சாமி!! வெறுத்துபோய் விவாகரத்து முடிவெடுத்த விஜே அர்ச்சனா.. மகள் செய்த செயல்..

அப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில், படத்தில் நடிகை அமலா பால் சிறப்பாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் அமலா பால் கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஜூஸ் குடிக்கும் போது கணவருக்கு ஊட்டுவது போல் ஏமாற்றும் கியூட் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.