கர்ப்பமாகி விரைவில் தாயாக போகும் நடிகை அமலா பால்!! வீடியோ..

Amala Paul Pregnancy Actress
By Edward Jun 08, 2024 03:30 PM GMT
Report

சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாகி விரைவில் தாயாக போகும் நடிகை அமலா பால்!! வீடியோ.. | Actress Amala Paul Welcome Baby Soon Video Post

சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி என்று இருந்த அமலா பால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஒருசில படங்களில் நடித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தவர் கடந்த அக்டோபர் மாதம் காதலரை திருமணம் செய்வதாக அறிவித்தார்.

பின் பிரம்மாண்ட முறையில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 3 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

சிவகார்த்திகேயனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் புலம்பித் தள்ளிய நடிகை கீர்த்தி சுரேஷ்!! உண்மையை கூறிய நடிகர் சூரி..

சிவகார்த்திகேயனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் புலம்பித் தள்ளிய நடிகை கீர்த்தி சுரேஷ்!! உண்மையை கூறிய நடிகர் சூரி..

இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அவர் நடிப்பில் ஆடுஜீவிதம் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் லெவல் கிராஸ் படத்திலும் நடித்து அமலா பால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதை நினைத்து வயிறு பெரிதாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.