அந்த மாதிரியான கிளாமர் காட்சியில் நடித்தேன், அப்படியான உணர்வு இருந்தது.. கயல் ஆனந்தி ஓபன் டாக்
கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கயல் ஆனந்தி. இதனை அடுத்து கயல், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடிக்க அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கயல் ஆனந்தி, துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை 2021ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கயல் ஆனந்தி கிளாமரான காட்சியில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், "இப்போ நடித்திருக்கும் படத்தில் சில காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டி இருந்தது. முதல் முறையை என்னுடைய comfortable zone ல் இருந்து வெளியே அந்த கதாபாத்திரத்திற்காக அப்படி நடித்தேன். அது எனக்கு சவாலாக இருந்தது. இதற்கு முன்பு அப்படி நடித்ததில்லை. இந்த படத்திற்காக அதை செய்தேன்" என்று கயல் ஆனந்தி கூறியுள்ளார்.