நெட்ஃபிளிக்ஸில் இனி அந்தமாதிரி சீனை ஸ்கிப் செய்யலாமா? ஷாக்கான இளசுகள்..

Gossip Today Netflix Social Media OTT Platforms
By Edward Nov 20, 2025 11:30 AM GMT
Report

Netflix 

1997-களில் கலிபோர்னியாவில் ஒரு சாதாரண டிவிடி கடையாக இருந்த Netflix , இப்போது உலகளவில் வெளியாகும் பல்வேறு படங்களை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் மூலம் பிரபலமாகி இருக்கிறது. 30 கோடிக்கும் அதிகமான கட்டணச் சந்தாதாரர்களை கொண்ட மிகப்பெரிய ஒடிடி தளமாக உருவெடுத்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் இனி அந்தமாதிரி சீனை ஸ்கிப் செய்யலாமா? ஷாக்கான இளசுகள்.. | Skip Adult Scene Netflix Clarified Rumours News

சமீபத்தில் எலான் மஸ்க், நெட்ஃபிளிக்ஸ் தளத்தை அட்ஃபாலோ செய்யுங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு காரணம், ஏகப்பட்ட ஆபாச காட்சிகள் அடங்கிய வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களை சர்வ சாதாரணமாக இன்றைய இளைய தலைமுறைக்கு வழங்கி வருகிறது.

Skip Adult Scene

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, ஆபா காட்சிகளை ஸ்கிப் செய்யும் ஆப்ஷனை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

அது முழுக்க முழுக்க வதந்திதான் என்றும் உண்மையல்ல, யாரோ அதை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என நெட்ஃபிளிக்ஸ் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த விஷயம் நல்லதுதானே அதை செய்யுங்கள் என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நெட்ஃபிளிக்ஸில் இனி அந்தமாதிரி சீனை ஸ்கிப் செய்யலாமா? ஷாக்கான இளசுகள்.. | Skip Adult Scene Netflix Clarified Rumours News

ஆனால் தற்போதுவரை நெட்ஃபிளிக்ஸ் இதை சேர்ப்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. இது அவர்களின் வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் அதை செய்யமாட்டார்கள் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.