கருப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்!! புகைப்படங்கள் இதோ..
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.
இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படத்தில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா. அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது மலையாளம் தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, கருப்பு நிற சேலையணிந்து ரசிகர்கள் வியக்கும்படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.