பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கனி மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ் 9ல் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் கனி மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர்.
இப்படியொரு எலிமினேஷனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கனி மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஆகிய இருவரும் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 40 நாட்கள் வீட்டிற்குள் இருந்த கனி ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் என்கிற கணக்கில் 40 நாட்களுக்கு ரூ. 4 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
மேலும், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் என மொத்தமாக 40 நாட்களுக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.