ஆண் பெண் பாகுபாடு இல்ல..பட வாய்ப்பு தரேன்னு சொல்லி அத பண்ணுவாங்க..அட்ஜஸ்ட்மென்ட் குறித்து விஜய் டிவி சீரியல் நடிகை
Serials
Tamil TV Serials
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் மோதலும் காதலும். இந்த சீரியலில் நடிகை அஸ்வதி முக்கியமான ரோலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அஸ்வதி சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறுகையில், இந்த துறையில் மட்டும் இல்ல, எல்லா துறையிலும் பிரச்சனை இருக்கிறது. அதுவும் மாடலிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி சில மாடலிங் ஏஜென்சிகள் இருக்கும் அவர்களிடம் இருந்து கவனமாக இருங்கள்.
மேலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எல்லா இடத்திலும் இருக்கும். அதில் ஆண் பெண் பாகுபாடு இல்லை என்று அஸ்வதி கூறியுள்ளார்.