பிரச்சாரத்திற்கு அழைத்த விஜய்!! ஐய்யய்யோ போகமாட்டேன் என்று கூறிய பிரபல நடிகை..
நடிகை ஆண்ட்ரியா
தென்னிந்திய சினிமாவில் பின்னனி பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் கவினுடன் மாஸ்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 21 ஆம் தேதி நேற்று ரிலீஸாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் பிரமோஷனுக்காக கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம், விஜய்யின் தவெக கட்சி பற்றிய சில கேள்விகள் கேட்கப்பட்டது.

நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் விஜய் பொதுமக்களை சந்திக்கவுள்ளார். இந்நிகழ்வில் 2000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா, விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
என்னைக் கேட்டால், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். அவருடன் நான் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன், அப்போது அவர் மிகப்பெரிய ஸ்டார். வளர்ந்து வரும் நடிகர் எல்லாம் இல்லை. ஆனாலும் எந்த பந்தாவும் இல்லாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு, மிகவும் எளிமையாக அனைவரையும் அணுகும் அளவிற்கு இருப்பார், நல்ல மனிதர்.

ஐய்யய்யோ போகமாட்டேன்
அவருடன் இணைந்து துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடியிருக்கிறேன். மாஸ்டர் படத்தில் ஷூடிங்கின் போது என்னிடம் அவர், அரசியலில் ஆர்வம் உள்ளதா? என கேட்டார். நான், இல்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அரசியலில் களமிறங்குவார் என நான் அப்போது நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் விஜய், பிரச்சாரத்திற்கு உங்களை அழைத்தால் போவீர்களா என்ற கேள்விக்கு, ஐய்யய்யோ...நான் போகமாட்டேன், அதை மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பிலேயே அவரிடம் சொல்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.