கேரள நடிகை காரில் கடத்தி துன்புறுத்திய வழக்கு!! நடிகர் திலீப் விடுதலை..
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தற்போது அதிரடி தீர்ப்பு வழங்கியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகையை கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் 2017 பிப்ரவரி இரவு நாட்டையே உலுக்கியது.

பாலியல் துன்புறுத்தல்
நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தபோது அவரது காரை பின்தொடர்ந்து வேறொரு காரில் சென்று ஒரு கும்பல் நடிகையின் காரின் பின்புறத்தில் மோதியுள்ளது. இதனால் காரை நிறுத்தி வாக்குவாதம் செய்தபோது நடிகையை வலுக்கட்டாயமாக காருக்குள் அந்த கும்பல் நுழைத்தனர்.
அந்த கும்பலை வழிநடத்திய பல்சர் சுனில், நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் நடிகையை பின்னாளில் மிரட்ட அதை செல்போனில் வீடியோவாக எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இப்படி திருச்சூர் - எர்ணாகுளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் சுமார் 2 மணி நேரத்திற்கு அந்த நடிகை கடத்தல் கும்பலிடம் சிக்கியதாக FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் இயக்குநர் ஒருவரின் வீட்டின் முன் நடிகையை இறக்கிவிட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியுள்ளனர்.
8 ஆண்டுகள்
அந்த நடிகை தைரியமாக காவல்துறைக்கு சென்று புகாரளித்ததன் பேரில், நடிகையின் முன்னாள் ஓட்டுநரான பல்சர் சுனில் கைதானர். சிறையில் இருந்தவாறு மலையாள நடிகர் திலீபுக்கு, பல்சர் சுனில் கடிதம் எழுதியதால் இந்த வழக்கை வேறு திசைக்கு திருப்பியதோடு பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பின் நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக மலையாள நடிகைகள் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முறையிட்டனர். இதன்பின் வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரனைக்கு மாற்றப்பட, திலீப், இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
2017 ஜூலை மாடம் திலீப் கைதாக அவருக்கு எதிராக மலையாள திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுததால், மலையாள திரைப்பட சங்க பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 65 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார் திலீப்.
சிபிஐ விசாரணை கோரிய மனுவும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய, நீதிபதி ஹனி வர்கீஸ் வழக்கின் தனி நீதிபதியாக நியமித்தனர் கேரள அரசு. இந்த வழக்கில் நடிகர் திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்க, விஷ்ணு உள்ளிட்ட இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக வாக்குமூலம் கொடுத்தனர்.

தீர்ப்பு
கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவுபெற, இன்று திலீப் உள்ளிட்ட 10 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் வெளியிட்டது.
இந்த வழக்கின் தீர்ப்புக்காக கேரளாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் செய்த 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. 6 பேரும் நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதேநேரம் திலீப்பிற்கு குற்றத்தில் பங்கில்லை என்றும் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறபட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நடிகை தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.