3 பேரை காதலித்து கழட்டிவிட்டு.. புதிய காதலனுக்கு கொக்கி போட்ட சீரியல் நடிகை
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய 'சத்யா' சீரியல் மூலம் பிரபலமானவர் ஆயிஷா. இதையடுத்து இவர் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ரசிகர் கூட்டத்தை அதிகரித்தார்.
இவர் 'சத்யா' சீரியலில் நடித்து வரும் போது சக நடிகர் விஷ்ணுவுடன் சேர்ந்து கிசுகிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் தனிமையில் அதிக நேரம் பேசிக்கொள்வதாகவும் தகவல் வெளியானது.
இது மட்டும் இல்லாமல், இதற்கு முன்பு ஆயிஷா ஒருவரை காதலித்து திருமணம் கொண்டதாக தகவல் வெளியானது. அவரின் முன்னாள் காதலன் பல பேட்டிகளில் ஆயிஷா குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவர், " ஆயிஷா காதலர்களை மாற்றுவது வழக்கமாக வைத்துள்ளார்" என்று கூறியிருந்தார்.
புதிய காதலன்
இந்நிலையில் ஆயிஷா காதலர் தினம் அன்று புதிய காதலனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்