நான் ரொம்ப அழகு, ஆனால் விஜய் கருப்பு! பிரபல நடிகையின் பேச்சு
தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த GOAT படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், சில இடங்களில் நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. விஜய் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம் நாளைய தீர்ப்பு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தனா என்பவர் நடித்திருந்தார். ஆனால், முதலில் கதாநாயகியாக நடிக்க நடிகை பாலம்பிகா என்பவர் தேர்வாகியுள்ளாராம்.
நடிகை பாலாம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தொகுப்பாளினி 'ஏன் நாளைய தீர்ப்பு படத்தில் நடிக்கவில்லை' என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகை பாலாம்பிகா "நடித்திருக்கலாம், ஆனால், எனக்கு தான் பிராப்தம் இல்லை. ஒரு வேலை நடித்திருந்தால் இன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும், விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் என்று".
"நாளைய தீர்ப்பு படம் எனக்கு கமிட் ஆகிவிட்டது. Half Sareeல் வர சொன்னாங்க, எஸ்.ஏ. சந்திரசேகர் படம் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது தான் விஜய்யை அவருடைய ஆபிஸில் பார்த்தேன். எஸ்.ஏ.சி சார் தான் Introduce செய்து வைத்தார். நான் சொன்ன நீங்க நம்ப மாட்டிங்க, அன்று நான் விஜய்யை பார்த்துவிட்டு இவனுக்கா நாம ஜோடியா நடிக்கப்போகிறோம். நான் ரொம்ப கலரு, விஜய் கருப்பு. கருப்புனா ரொம்ப இல்ல மாநிறமா இருப்பாரு. ஆனால், இப்போ ரொம்ப அழகாக மாறிவிட்டார்" என கூறியுள்ளார்.