பிக்பாஸ் 9 டபுள் எவிக்ஷனுக்கு ரெடியா!! வீட்டைவிட்டு வெளியேறிய 2 பேர்
பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 9ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 40 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 9ல் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ் உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்.

அவர்களை தொடர்ந்து திவ்யா கணேஷன், அமித், பிரஜன், சாண்ட்ரா போன்ற போட்டியாளர்கள் வைல்ட்கார்ட்டில் எண்ட்ரி கொடுத்தனர். அந்தவகையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அப்படி, இந்த வாரம் முதல் எவிக்ஷனாக கனி திரு பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
டபுள் எவிக்ஷன்
தற்போது இன்னும் ஒருவர் பிக்பாஸ் 9 வீட்டில் எவிக்ட்டாகி வெளியேற்றப்பட்டுள்ளாராம். அது வேறு யாருமில்லை, நம்ம வாட்டர்மெலன் திவாகர் தான் 2வது நபராக இன்று பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
