லீலை மன்னனிடம் காதல் வலையில் சிக்கி எஸ்கேப் ஆன நடிகை பானுப்பிரியா!! காப்பாற்றிய இயக்குனர்..

Bhanupriya Gossip Today Actress
By Edward Jul 22, 2023 10:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை சினிமாத்துறை முக்கியம் என்பதால் எதற்கு அளவில்லா நடிப்பை கொடுத்து வந்தார்கள். அப்படி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பானுப்பிரியா.முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த பானுப்பிரியா சமீபத்தில் நடிகர் கார்த்திக்கின் கடைக்குட்டிசிங்கம் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கிடைக்கும் படங்களில் நடித்து வரும் பானுப்பிரியாவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தான் நடிகரால் ஏமாற்றமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது. தமிழில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் சினிமாவில் வெற்றியை கண்டாரோ இல்லையோ அதிகம் சர்ச்சையில் சிக்கியது தான் அதிகம்.

அப்படி நடிகைகளுடன் நெருக்கமான நட்பு தான் அவரது பெயரே கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அப்படி பானுப்பிரியாவுடன் நடித்த போது அவருக்கு நடிகர் மீது காதல் மலர்ந்துள்ளது. காதல் அதிகரிக்க படப்பிடிப்பிலேயே ஓவர் ரொமான்ஸ் செய்து சுற்றி வந்துள்ளனர். நடிகரை உருகி உருகி காதலித்த பானுப்பிரியாவை நேரில் சந்தித்த இயக்குனர் ஒருவர் நடிகர் பற்றிய அனைத்து உண்மைகளை கூறியிருக்கிறார்.

திருமணம் செய்துகொள்வதாக கூறியதாகவும் நடிகர் பானுப்பிரியாவை நம்ப வைத்திருக்கிறார். உடனே இயக்குனர் அந்த நடிகருக்கு சகஜமாக கால் செய்து அனைத்து உண்மைகளையும் வரவழைக்க திட்டம் போட்டுள்ளார். பானுப்பிரியா முன்பே அந்த நடிகருக்கு கால் செய்து ஸ்பீக்கரில் பேசியிருக்கிறார். இயக்குனரை நம்பி தன் லீலைகளை வெளிப்படையாக கூறியதை பார்த்த பானுப்பிரியா ஷாக்காகியுள்ளார்.

உடனே அந்த நடிகர் பக்கமே செல்லாமல் எஸ்கேப்பாகி 1998ல் ஒருவரை திருமணம் செய்து 7 ஆண்டுகளில் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். கடந்த 2018ல் தான் பானுப்பிரியாவின் கணவர் மரணமடைந்தார். அதுவும் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் கணவர் இறப்பு தெரியவந்திருக்கிறது.