பிரபலம் கொடுத்த கிஃப்ட்.. டிராகன் பட நடிகை கயாடுக்கு ஒரே வெட்கம் தான்

Trending Videos Actress Kayadu Lohar
By Bhavya Apr 12, 2025 11:30 AM GMT
Report

கயாடு லோஹர்

டிராகன் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் நடிகை கயாடு லோஹர்.

இவர் மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

பிரபலம் கொடுத்த கிஃப்ட்.. டிராகன் பட நடிகை கயாடுக்கு ஒரே வெட்கம் தான் | Actress Birthday Celebration Video Goes Viral

கிஃப்ட்

தற்போது, அதர்வா ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று தனது 25 - வது பிறந்தநாளை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை கயாடு கொண்டாடியுள்ளார்.

தற்போது இந்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், படக்குழுவினர் அனைவரும் கயாடுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இசையமைப்பாளர் தமன் கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அதை பார்த்து அசந்து போன கயாடு சோ ஸ்வீட் என்று வெட்கத்துடன் தெரிவித்திருக்கிறார். இதோ வீடியோ,