உடனே குழந்தை பெத்துக்கணுமா? ஏன் கல்யாணம் பண்ணேன்னு இருக்கு!! சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..
கன்னட சின்னத்திரையில் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் பக்கம் வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சைத்ரா ரெட்டி. தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா என்ற ரோலில் பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் நடித்திருந்தார். அவர் சீரியலில் இருந்து வெளியேறியப்பின் அவருக்கு பதிலாக பிரியா ரோலில் நடிக்க ஆரம்பித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.
இதன்பின் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாகவும் சுபத்ரா என்ற தெலுங்கு சீரியலிலும் கயல், மாய தோட்டா போன்ற சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா, வலிமை படத்தில் லதா ரோலில் நடித்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகேஷ் சமலா என்பவரை காதலித்து திருமணம் செய்தும் சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை யாரும் தொல்லை பண்ணுவது கிடையாது.
அம்மா, அப்பா, கணவர் யாரும் சரி, எனக்காக, என்னை செளகரியத்தை புரிந்து கொண்டு, அவர்களின் வேலைகளை பார்த்துக்கொள்வார்கள் அதனால் சினிமா, தனிப்பட்ட வாழ்க்கையையும் சரியாக கவனம் செலுத்தி வருகிறேன்.
பொதுவாக ரசிகர்கள் எல்லோரும் கேட்பார்கள் குழந்தை எப்போது பெத்துக்க போறீங்க என்று தொகுப்பாளினி கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த சைத்ரா ரெட்டி, கல்யாணமே சீக்கிரமா பண்ணிட்டன்னு வருத்தப்படுறேன், இதுல குழந்தை. கொஞ்ச நாள் போகட்டும், படங்கள் எல்லாம் நல்லா பண்ணிட்டு செய்யலாம் என்று கூறியிருக்கிறார். எப்போதும் என் வீட்டில், நீ இப்படி தான் இருக்கனும், குடும்ப பெண்ணாக இருக்கனும் என்று அவர்கள் விரும்பவில்லை.
ஆண்களை போல் கல்யாணத்திற்கு முன் - கல்யாணத்திற்கு பின் எப்படி ஏதும் மாறாதோ, அதேபோல் பெண்களுக்கும் மாறக்கூடாது என்னோட எண்னம் என்று அதை தான் நான் செய்கிறேன். அதை தான் என் கணவர், தான் தான் என்று நினைக்காமல் இருக்கிறார் என்று நடிகை சைத்ரா ரெட்டி ஓப்பனாக பேசியிருக்கிறார்.