இந்த அழகிய குழந்தை யார் தெரிகிறதா?.. ரசிகர்களின் கனவுக் கன்னி தான்!

Viral Photos Actress Rukmini Vasanth
By Bhavya Oct 04, 2025 05:30 AM GMT
Report

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், கன்னட சினிமா மூலம் நடிக்க தொடங்கி தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருகிறார்.

இந்த அழகிய குழந்தை யார் தெரிகிறதா?.. ரசிகர்களின் கனவுக் கன்னி தான்! | Actress Childhood Photo Viral On Social Media

அட இவரா? 

அவர் வேறு யாருமில்லை, நடிகை ருக்மிணி வசந்த் தான். கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர்.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதனை தொடர்ந்து ருக்மிணி வசந்த் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த் நடிப்பை அனைவரும் பாராட்டி வந்தனர்.

ருக்மிணி வசந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படம் வசூலில் மாஸ் காட்டி வரும் நிலையில், இவரது சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.     

இந்த அழகிய குழந்தை யார் தெரிகிறதா?.. ரசிகர்களின் கனவுக் கன்னி தான்! | Actress Childhood Photo Viral On Social Media