16 வயசுல பண்ண தப்பு.. இரண்டாம் திருமணத்திற்கு பின் மகனுடன் தனியாக இருக்கும் நடிகை தீபா பாபு..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன் என்று சீரியல் நடிகை தீபா பாபு சமீபத்திய பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். 16 வயதில் திருமணம் செய்து ஆண் குழந்தையை பெற்ற தீபா, கணவரை விவாகரத்து செய்து சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அவர் கூறுகையில், 14 வயதில் நடிகையாக அறிமுகமாகினேன். 16 வயதில் தப்பான வயசுல, தப்பான ஒருவரை, தப்பான நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன். அதன்பின் எனக்கு தப்பான வாழ்க்கையாக, என்னால் அமைந்தது. விருப்பத்துடன் குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டேன். அந்த தப்பில் ஒரு முத்து தான் என் பையன். கெட்டதில் கடவுள் கொடுத்த ஒரு பொக்கிஷம். முதல் திருமணத்திற்கு பின் உடனே கர்ப்பமாகினேன். நடிக்க வைக்கவில்லை. சாப்பிடுவதற்கு கூட நான் கஷ்டப்பட்டேன்.
திருமணத்திற்கு முன் எல்லாமே நன்றாக என் குடும்பத்தினர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் 16 வயசுல பண்ண தப்பு, அதை அப்படியே என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. என் பையனுக்கு 15 ஆகும் போது நான் எப்படி பாப்பாவை வயிற்றில் வைத்திருந்தேன், பெத்தெடுத்தேன், வளர்த்தேன் என்பது கூட எனக்கு நியாபம் இல்லை. கர்ப்பமாக இருக்கும் போது ரேஷன் அரசி வாங்கி கொடுப்பார்கள், எனக்கு கஷ்டமாக இருந்தது.
17 வயசில் 17 நாட்களுக்கு பின் தான் என் பையனை பார்த்துக்கொண்டேன். அப்போது அத்திப்பூக்கள் சீரியலில் என் குழந்தையை வேறுவழியில்லாமல் நடிக்க வைத்து அவன் காசில் தான் நாங்கள் சாப்பிட்டோம். அதையெல்லாம் தாண்டி, இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். கணவரை பிரிந்தப்பின், என் குடும்பத்தை கஷ்டப்பட வைத்தேன். அவர்கள் மீது கோபம் வந்தது, அவர்கள் கோபம் நியாயம் தான். இப்போது தான் என் பெற்றோர்கள் வந்து இருக்கிறார்கள்.
மேலும் பேசிய அவர், கல்யாணமாகி 3வது நாளில் கணவர் பற்றிய உண்மை தெரிய வந்தது. போலிஸ் பிரச்சனை வரும் போது, என் தாலியை கழட்டி, வீட்டைவிட்டு அனுப்பினார். ஆனால் வேறு வழியில்லாமல் அவர் கூட இருந்து கர்ப்பமானதும் அப்பா, அம்மா விட்டுவிட்டார்கள். நான் உயிரோட இருக்க காரணம் என் பையன் தான் காரணம். 4 வயது குழந்தையை வெச்சிக்கிட்டு எப்படி ஷூட்டிங்கிற்கு கொண்டு போவேன், பக்கத்து விட்டு ஒரு அக்கா தான் பார்த்துக்கொண்டார்.

மனைவியின் இறுதி சடங்கை கூட சொந்த ரத்தத்தை பார்க்கவிடாமல் செய்த இளையராஜா..நடு ரோடுத்தில் கதறிய கங்கை அமரன்
அதன்பின் ஹாஸ்டலில் விட்டபோது, பல பிரச்சனை. ஹாஸ்டலில் பையனை விட்டுவிட்டு ஊர்சுத்துரா, வேறு ஒருவருடன் தொடர்பு இருக்குன்னு பேசுனாங்க. என் முதல் வாழ்க்கையில் இருந்து வெளியில் வந்தபோது, ரோட்டில் என் பையனை வைத்துக்கொண்டு நின்னேன். யாரும் இல்லாமல் எதுவும் இல்லானல் நின்னேன்.
அப்போது யோசித்தேன், படித்திருந்தால் வேலைக்கு போய் 25 ஆயிரம் சம்பளம் சம்பாதித்திருக்கலாம். அப்பா ஒருவன் இருந்திருந்தால் கூட நம் வாழ்க்கை, அம்மா இல்லாமல் வாழ்ந்திருக்க முடியாது என் பையன் நினைக்கனும் என்று இருந்தேன். ஆண்டாள் அழகர் சீரியலில் 2500 ரூபாய் தான் முதல் சம்பளம் என்று தீபா பாபு தெரிவித்துள்ளார்.