என்ன தப்பா எடிட் பண்ணி வீடியோ போட்டாங்க..உங்க வீட்டுல பொண்ணு இருக்கு தானே!..நடிகை தீபா வெங்கட் வேதனை
நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பன்முகங்களைக் கொண்டவர் தான் நடிகை தீபா வெங்கட். இவர் 1994 -ம் ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த பாசமலர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து, உல்லாசம், தில், உள்ளம் கொள்ளைப் போகுதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முரட்டு சிங்கள்ளா இருந்து வந்த சிம்புக்கு 40 வயதில் திருமணம்..பொண்ணு யார் தெரியுமா?..அந்த பிரபலத்தின் மகளா
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட தீபா வெங்கட், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "நிறைய யூடியூப் சேனல்கள் என்னை பற்றி போலியான செய்திகளை வெளியிடுகின்றனர். என்னுடைய புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்ட் மற்றும் வீடியோ வந்திருக்கிறது. அதைப் பார்த்து என்னுடைய அம்மா அப்பா உறவினர்கள் கூட நிறையவே வருத்தப்பட்டார்கள்.
அவர்களுக்கு அது எவ்வளவு வலியை ஏற்படுத்தியிருக்கும். இது போன்ற ஒரு வீடியோவை எதற்கு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கும் குடும்பம், பெண்கள் இருக்கிறார்கள் தானே. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என மனமுடைந்து பேசியுள்ளார்.