அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்தால் பட வாய்ப்பு தரமாட்டார்கள்.. உண்மையை உடைத்த நடிகை தேவி பிரியா
தேவி பிரியா
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பல கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை தேவி பிரியா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'சத்தி' சீரியலில் மூலம் அறிமுகமானார்.
பெரும் பாலும் இவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த வந்த இவர், கங்கை அமரனின் 'ஊரு விட்டு ஊரு வந்து' படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். இதன் பின்னர் வாலி, மஞ்சப்பை, யாமிருக்க பயமே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அட்ஜஸ்ட்மெண்ட்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியாவிடம், ஹீரோயின்கள் சினிமாவில் எதிர்கொள்ளும் கஷ்டத்தை குறித்து கேள்வி கேட்டனர். பதில் அளித்த அவர், "என்னிடம் இது வரை யாரும் தவறான எண்ணத்தில் பேசியதில்லை. இருப்பினும் அது போன்று என்னிடம் பேசினால் அவர்கள் தரும் பட வாய்ப்பை நான் நிராகரித்து விடுவேன்.
ஹீரோயின்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்தால், அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காது. அதனால் தான் சினிமாவில் இருந்து நிறைய பேர் காணாமல் போனார்கள்" என்று தேவி பிரியா கூறியிருந்தார்.