CSK போட்டி மூலம் பிரபலமான சீரியல் நடிகை தர்ஷனாவா இது!! உச்சக்கட்ட கவர்ச்சியில் பீச் புகைப்படங்கள்..
தமிழ் மக்களையும் கிரிக்கெட்டையும் எப்போதும் பிரிக்க முடியாது. எந்த விளையாட்டை அதிகம் பார்க்கிறார்களோ இல்லையோ, கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தவகையில் சமீபத்தில் நடந்து வரும் ஐபிஎல் 2024 பல சம்பவங்கள் பிரபலமாகின. அந்தவகையில் அண்மையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
இந்த போட்டியை காண வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். சமீபத்திய போட்டியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பார்த்த நட்சத்திரங்களில் ஒருவர் தமிழும் சரஸ்வதியும் சீரியர் புகழ் தர்ஷனா. தற்போது இவர் பூவா தலையா என்ற சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென வைரலாக அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். அதாவது அந்த போட்டோவில் அவரது கழுத்தில் தாலி போன்ற மஞ்சள் கயிறு இருந்ததை பார்த்து ரசிகர்கள் திருமணம் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்ப, அது தாலி இல்லை விசில் கயிறு தான் என்று தர்ஷனா கூறியிருந்தார்.
இதன்பின் மூலம் இணையத்தில் அதிகளவில் பேசப்பட்ட தமிழ் நடிகையாக இருந்து வரும் தர்ஷனா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கடற்கரையில் கவர்ச்சியாடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்து ஷாக் கொடுத்துள்ளார்.