சினிமாவில் திறமையைவிட அதுதான் முக்கியம்!! பிரபல நடிகை டயானா பென்டி ஓபன் டாக்...
டயானா பென்டி
சாவா, ஆசாத் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை டயானா பென்டி. தற்போது டு யூ வான்ன பார்ட்னர் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
இதில் இவருடன் நடிகை தமன்னா ஜாவேத் ஜாப்ரி, நகுல் மேத்தா, ஸ்வேதா திவாரி, நீரஜ் கபி உள்ளிடவர்கள் நடித்துள்ளனர். தற்போது டு யூ வான்ன பார்ட்னர் வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.
அதுதான் முக்கியம்
சமீபத்தில் அவர்களித்த பேட்டியொன்றில், பெண்களின் திறமைக்கான வாய்ப்பு கிடைப்பது பற்றி பேசியுள்ளார். அதில், திரைத்துறையில் திறமையாக இருக்கும் நடிகையைவிட அழகாக இருக்கும் நடிகைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எனக்கு 30 வயது தான், ஆனாலும் பல குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டியுள்ளது. நடிகைகள் தங்கள் அழகுக்காக பாராட்டப்படுவது நல்லதுதான், ஆனால் அது போதாது.
ஒரு நடிகையாக உங்கள் அழகுக்காக மட்டுமில்லாமல் திறமைகள் மற்றும் நடிப்புக்காகவும் பாராட்ட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.