பிக்பாஸ் சீசன் 9-ல் வைல்ட் கார்ட் எண்ட்ரி!! இந்த சீரியல் நடிகையா?
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷாக்களில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் வாரம் முடியும் முன்பே, நந்தினி என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறினார். அவரை தொடர்ந்து முதல் வார எவிக்ஷனில் குறைந்த வாக்கு பெற்று பிரவீன் காந்தி எவிக்ட்டாகினார்.
கடந்த வாரம் 2வது எவிக்ஷனில் அப்சரா சிஜே எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். வரும் வாரம் யார் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரி பற்றிய தகவல்களும் இடையில் வந்து கொண்டிருக்கிறது.

திவ்யா கணேஷன்
அதில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற ரோலில் நடித்த திவ்யா கணேஷன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம். அன்னம் சீரியலில் இருந்து சமீபத்தில் திவ்யா கணேஷன் வெளியேறிவுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வரத்தான் சீரியலில் இருந்து விலகியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.