விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா அனுபவித்த வலி!

Samantha Tamil Cinema Divorce Actress
By Bhavya Oct 25, 2025 06:30 AM GMT
Report

சமந்தா 

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார்.

விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா அனுபவித்த வலி! | Samantha About Pain In Divorce Details

அனுபவித்த வலி! 

இந்நிலையில், சமீபத்தில் சமந்தா பகிர்ந்த சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " என் வாழ்க்கையில் நான் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறேன். நான் சிக்கலில் இருந்தபோது, சிலர் அதை கொண்டாடினர். எனக்கு மயோசிடிஸ் வந்தபோது கேலி செய்தனர், விவாகரத்தின் போது கொண்டாடினர்.

இதையெல்லாம் பார்த்து எனக்கு மனம் வலித்தது. ஆனால் படிப்படியாக நான் அதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.  

விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா அனுபவித்த வலி! | Samantha About Pain In Divorce Details