பீரியட்ஸ் நின்னு 6 மாசமாச்சு..கர்ப்பமும் இல்ல!! நடிகை ஃபரீனா அசாத் ஓபன் டாக்..
ஃபரீனா அசாத்
விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா அசாத். பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரீனா, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், எனக்கு மாதவிடாய் நின்று ஏறக்குறைய 6 மாதங்களாகிவிட்டது. மாதவிடாயும் இல்லை, கர்ப்பமும் இல்லை, மாதவிடாய் முற்றிலும் நிறும் வயதும் இல்லை. நான் மருந்துகள் சாப்பிட்டுவிட்டேன், பொறுமையுடன் காத்திருந்துவிட்டேன், கவலைப்பட்டேன், அளவுக்கு அதிகமாக யோசித்தும் பார்த்துவிட்டேன், ஆனால் இன்னும் எதுவும் நடக்கவில்லை.
இது பார்க்க எளிதாக தோன்றலாம், ஆனால் உண்மையில் இந்த மாதங்கள் முழுவதிலும் என் ஹார்மோன்கள் எப்படி மாறுபட்டுக் கொண்டிருந்தன என்றோ, அல்லாது அதனால் தான் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றோ எனக்கு தெரியவில்லை. மனநிலை மாற்றங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள், அளவுக்கு அதிகமான யோசனைகள், எந்தக் காரணமுமின்றி மனச்சோர்வாக உணர்வது, ஒருவேளை நான் உணர்ந்ததைவிட என் உடல் அதிக சிரமங்களை கடந்து கொண்டிருக்கிறது போன்றது.

ஆனால் இந்த அனுபவம் எனக்கு ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது. நம் உடல்கள் அமைதியாக எவ்வளவோ விஷயங்களை எதிர்கொள்கிறது.
மேலும் குணமடைவது என்பது எப்போதும் விரைவாகவோ, எளிதாகவோ நடப்பதில்லை, உடலளவிலோ, மனதளவிலோ இப்போது நீங்கள் எதைக் கடந்து கொண்டிருந்தாலும், தயவுசெய்து ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், அதற்கு நேரமெடுக்கலாம், அது உங்கள் பொறுமையை சோதிக்கலாம், ஆனால் உங்களால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.
நாம் நினைப்பதைவிட நம் உடல்கள் வலிமையானவை. நானும் தான். என் உடல் விரைவில் அதற்கான இயல்பு நிலையை மீண்டும் கண்டடையும் என நம்புகிறேன். அதுவரை நான் பொறுமையும், நம்பிக்கையும், என்மீது இன்னும் கொஞ்சம் அதிகமான அன்பையும் தேர்ந்தெடுக்கிறேன் என்று ஃபரீனா பதிவிட்டுள்ளார்.