62 வயசுலயும் பிபி, சுகர் இல்லை..பொய் சொன்ன பெண்!! பாத்திமா பாபு செய்த செயல்..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த செய்தி வாசிப்பாளர் தான் பாத்திமா பாபு. சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வரும் பாத்திமா பாபு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் மீண்டும் பிரபலமானார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.
[XAIYG5
பாத்திமா பாபு
அதில், எனக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் ஒன்று இருந்தால் அது பொய் சொல்வது தான். நான் இதுவரை எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லியதே இல்லை. அதேபோல், யாராவது என்னிடம் பொய் சொல்லி தெரிந்துவிட்டால் அவர்கள் யார் என்றாலும் நேரடியாக சண்டை போடுவேன்.
ஒரு பெண் என்னிடம் பொய் சொன்னது தெரிய வந்ததும், நான் காரை நிறுத்தி அவளை இறக்கிவிட்டு நேராக கிளம்பிவிட்டேன். அந்தளவிற்கு பொய்யை நான் வெறுக்கிறேன்.

தன்னுடைய உடல்நலத்தை பற்றி பேசிய பாத்திமா பாபு, இப்போது எனக்கு 62 வயதாகிறது. என் வாழ்க்கையில் பெரிதாக உடல்நல பிரச்சனைகள் வந்ததே இல்லை. 10 ஆம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டப்பின் கொரானா காலத்தில் சில பாதிப்புகள் வந்தது.
இந்த வயதிலும் சுகர், பிபி என்று எதுவுமே இல்லை. இதற்கு காரணம், நான் எந்த கஷ்டத்தையும் மனதில் வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டதே இல்லை, அதுதான் என் ஆரோக்கியதிற்கு முக்கிய காரணம்.

இந்த காலத்து பசங்க
இந்த காலத்து பசங்க, பெற்றோருக்கு மரியாதை கொடுப்பதேயில்லை. எல்லாம் நமக்குத்தான் தெரியும் என்ற போக்கில் நடந்து கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் வளர்ந்த காலத்தில், என் அப்பாவை போல் யாரும் வரமுடியாது.
இன்றைய டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான அட்வைஸும் நாம் கொடுத்தாலும் அவர்களுக்கு அதைபுரிந்து கொள்ளும் மனநிலை இல்லை. இதனால் அவர்களே வாழ்க்கையில் பட்டு பலவிஷயத்தை தெரிந்துகொண்டால் மட்டும் தான் வாழ்க்கை என்ன என்பது தெரியும் என்று தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பாத்திமா பாபு.