25 கோடியை ஆட்டையை போட்ட நபர்!! 25 வருட உறவுக்கு முடிவுகட்டிய நடிகை கெளதமி..
தென்னிந்திய சினிமாவில் 90s-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கெளதமி. கணவரை விவாகரத்து செய்து 13 ஆண்டுகளாக கமலுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். தன் மகளின் எதிர்காலத்திற்காக கெளதமி, கமலிடம் இருந்து பிரிவதாக கூறி தற்போது மகளுடன் தனியாக இருந்து வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக பிரபல கட்சியில் உறுப்பினராக இருந்து பல விசயங்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கெளதமி, அந்த கட்சியில் இருந்து விலகுவதாக கூறி அதற்கான காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.
விவாகரத்துக்கு பின் தனிமையில் இருந்த கெளதமியிடம் அழகப்பன் என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரையும் அவரின் குடும்பத்தையும் நம்பி கெளதமி தன்னுடைய சொத்து சம்பந்தப்பட்ட ஆவணத்தை அவரிடம் கொடுத்திருக்கிறார்.
சுமார் 25 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கும் பொறுப்பை அழகப்பனிடம் கொடுத்த போது அவரது மனைவியின் பெயரையும் சேர்த்து எழுதி மோசடி செய்திருக்கிறார். 40 நாட்களாக இதையறிந்து புகாரளித்ததில் இருந்து அழகப்பன் 40 நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதுகுறித்து கட்சியை சேர்ந்தவர்களிடம் கூறியும் அவர்கள் அழகப்பனுக்கு தான் சப்போர்ட்டாக இருப்பதால் மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனால் தான் கட்சியில் இருந்து விலகியதாகவும் இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலினை நம்பி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நடிகை கெளதமி.