ஒரே ஆண்டில் 12 படங்கள்!! ஹிட் கொடுத்த அடுத்த ஆண்டே உயிரிழந்த நடிகை..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகைகளாக இருந்த ஸ்ரீதேவ், மாதுரி தீக்ஷித் கூட நிகழ்த்த முடியாத சாதனையை ஒரு நடிகை நிகழ்ச்சியுளார். இன்று வரை அந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. ஒரே ஆண்டுல் அந்த நடிகை நடித்த 12 படங்கள் வெளியானது.

திவ்ய பாரதி
அப்படி என்றால், மாதம் ஒரு படம் என்ற கணக்கில் படப்பிடிப்பு நிதழ்த்தியிருக்கலாம். ஆனால் அவர் 19 வயதிலேயே உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் தான் நடிகை திவ்ய பாரதி.
14 வயதில் கதாநாயகியாகி சினிமா பயணத்தை தொடங்கினார். மாடலிங் உலகில் 14 வயதில் நுழைந்த திவ்ய பாரதி, 1990; நிலா பெண்ணே என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

அதன்பின் பாபிலி ராஜா என்ற தெலுங்கு படத்தில் நடித்து பின் விஸ்வாத்மா என்ற பாலிவுட் படத்தில் 1992ல் அறிமுகமாகினார். 1993ல் தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்து இறந்துள்ளார்.
தற்போது அவர் இறந்து 32 ஆண்டுகளாகியும் ரசிகர்கள் அவரை மறக்கவில்லை. 1992ல் ஒரே வருடத்தில் 12 படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்திருக்கிறார் திவ்ய பாரதி.