டாக்டருக்கு படிச்சிட்டு ரசிகர்களின் கனவுக்கன்னியான பிரபல நடிகை!! இவர் தான்..
சினிமாவில் ஏற்பட்ட ஆர்வத்தால் மருத்துவம் படித்த சில நடிகைகள் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிவிடுகிறார்கள். அப்படித்தான் ஒரு நடிகை மருத்து படிப்பை முடித்துவிட்டு நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி
அந்தவகையில் மருத்துவம் முடித்துவிட்டு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. திருவனந்தபுரத்தில் பிற்ந்தவர் எர்ணாகுளத்தில் மருத்துவ படிப்பை முடித்தார்.
அதேசமயம் நடிப்பின் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் அடியெடுத்து வந்தார். விளம்பரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

விஷாலின் ஆக்ஷன் படத்தில் தமிழில் அறிமுகமாகி, ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி என பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது கட்டா குஸ்தி 2 படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.