உருவ கேலி செய்தவருக்கு போட்டோஷூட்டால்.. பதிலடி கொடுத்த கெளரி கிஷன்..
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார். மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கடைசியாக 'சுழல் 2' என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டுத்து Others என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் கடந்த 7 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. யூடியூபர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடும் கோபமாகி வாக்குவாதம் செய்தார் கௌரி, இந்த மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன் என்று பதிலளித்தார்.
போட்டோஷூட்
இந்நிலையில், கெளரி கிஷன், இந்திய மீடியோ முழுவதும் டிரெண்ட்டாகினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கெளரி, சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டால் தன்னுடைய உடலை வைத்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.











