திருமணத்துக்கு பின்பும் இப்படியா!! சிக்பேக் காமித்து ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம்..

Hansika Motwani Tamil Actress Actress
By Edward Aug 27, 2023 10:50 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கு, கன்னட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஹன்சிகா மோத்வானி.

தமிழில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை, ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் விஜய், சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாகினார். இடையில் சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் பிரிந்துவிட்டார்.

உடல் எடையை ஏற்றி அதன்பின் மீண்டும் ஒல்லியாக மாறி வந்த ஹன்சிகா தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு இறுதியில் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் கமிட்டாகிய படங்களில் நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா கிளாமர் போட்டோஷூட்டினையும் விடவில்லை.

தற்போது சிக்ஸ்பேக் காமித்தபடி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஹன்சிகா.