மது குடிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஹன்சிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்..
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன்பின் தெலுங்கில் கதாநாயகியாக பிரபலமானார்.
பின் தமிழில் தனுஷ், விஜய், சூர்யா, ஆர்யா, விஷால், சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தார். நடிகர் சிம்புவை காதலித்து வந்த ஹன்சிகா, சில காரணங்களால் அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.
அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தியும் உடல் எடையை குறைத்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு சோஹைல் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் நடித்து வரும் ஹன்சிகா கிளாமர் போட்டோஷூட்டையும் விடவில்லை.
தற்போது அவரது அம்மாவின் பிறந்தநாளுக்காக வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்றுள்ளார் ஹன்சிகா. அங்கு மது அருந்தும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.