சமீபத்தில் விவாகரத்து பெற்ற நடிகை ஹன்சிகா மோத்வானியின் சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா?

Hansika Motwani Net worth
By Kathick Mar 14, 2026 02:30 AM GMT
Report

தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதன்பின் வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 என தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் விவாகரத்து பெற்ற நடிகை ஹன்சிகா மோத்வானியின் சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா? | Actress Hansika Motwani Net Worth

கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதன்பின் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளது.

சமீபத்தில் விவாகரத்து பெற்ற நடிகை ஹன்சிகா மோத்வானியின் சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா? | Actress Hansika Motwani Net Worth

இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஹன்சிகாவின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஹன்சிகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 37 கோடி என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் விளம்பரங்கள் மூலம் ரூ. 25 லட்சம் வரை சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.