அறையில் பூட்டி வைத்து கேவலமாக நடந்து கொண்ட சிம்கார்ட் ஊழியர்கள்.. பிரபல நடிகை செய்த செயல்..
மலையாள சினிமாவில் அங்கமாலி டைரீஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். சமீபத்தில் தேசிய விருது படமாக அறிவிக்கப்பட்ட அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் அன்னா.

அன்னா ரேஷ்மா ராஜன்
ஒருசில படங்களில் நடித்து வரும் அன்னா ரேஷ்மா சமீபத்தில் தன்னுடைய சிம்கார்டி தொலைந்துவிட்டது என்று புதிய சிம்கார்ட் வாங்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு கோபப்படுத்தியிருக்கிறார்கள். தன்னை நடிகை என்று காட்டிக்கொள்ளாத அன்னா ரேஷ்மா ராஜன் இதனால் கோபமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர். இதனால் கண்ணீர் மல்க அழுதிருக்கிறார் அன்னா. உடனே தனக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு நடந்தது கூறி வரவழைத்திருக்கிறார்.

எல்லைமீறிய ஊழியர்கள்
அவர்களும் காவல்துறையினரை அழைத்து வந்து நடிகையை மீட்டிருக்கிறார்கள். இதன்பின் அன்னா ரேஷ்மா ராஜன் ஒரு நடிகை என்று தெரிந்ததும், அந்த ஊழியர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டும் இதை பெரியப்படுத்த வேண்டாம் எங்கள் வேலை போய்விடும் என்று கேட்டுள்ளனர். வேலைக்கிடைப்பது கடினம் என்பதால் அவர்களை மன்னித்துவிட்டேன் என்று கூறியும் இதுபோல் சக வாடிக்கையாளர்களிடம் கூட நடந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார் அன்னா ரேஷ்மா ராஜன்.