என்ன ஜான்வி கபூர் அணிந்துள்ள புடவையின் விலை இத்தனை லட்சமா? அடேங்கப்பா!
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் ஜான்வி கபூர்.
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளான இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தற்போது ஜான்வி கபூர் பரம சுந்தரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் ஜான்வி கபூர் கேரளாவை சுற்றிப் பார்க்க கிளம்பியுள்ளார்.
இத்தனை லட்சமா?
அப்போது அவர் சிம்பிளான ஒரு வெள்ளை நிற புடவை அணிந்திருக்கிறார். தற்போது இந்த புடவையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வெள்ளை நிறத்தில் பார்க்க சிம்பிளாக தெரியும் இந்த புடவையின் விலை ரூ. 2 லட்சத்து 47 ஆயிரமாம், இது Anavila என்ற பிராண்டின் புடவையாம்.