நல்ல வேள நா அத மிதிக்கல!! பிக்பாஸை ஒதுக்கிய சீரியல் நடிகை..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் பிக்பாஸ் சீசன் 9 விஜய் சேதுபதி தலைமையில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ள நிலையில், சென்ற முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கிடையே சண்டை நிலவி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 9ல் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்த்த சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நல்ல வேள நா அத மிதிக்கல’ என்று ஸ்டோரியை பகிர்ந்து #iykyk என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தியிருக்கிறார். Gen Z ஸ்லாங்கில் ‘If You Know, You Know’(உங்களுக்குத் தெரிந்தால், உங்களுக்குத் தெரியும்) என்பதை தான் ஜனனி கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி எனகு எப்போதே தெரிந்ததால் தான், தான் செல்லவில்லை என்று ஜனனி குறிப்பிட்டிருக்கிறாரோ என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
