15 நாள் படுக்கைக்கு வந்தால் ஓகே.. கார்த்தி பட நடிகை சொன்ன ஷாக் தகவல்

Karthi Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 02, 2023 09:43 AM GMT
Report

கார்த்தி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா நடித்திருப்பார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார். இயக்குனர் ஒருவர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று என்னை அழைத்தார்.

அந்த சமயத்தில் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள். எனக்கு அட்ஜஸ்மென்ட் என்றால் என்ன என்று தெரியவில்லை. அப்போது இயக்குனர் என்னிடம், நீங்கள் 15 நாட்கள் தயாராக இருங்கள். அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும்.

முதலில் இயக்குநர் அறைக்குள் வருவார். அதற்கு அடுத்து தயாரிப்பாளர் கேமராமேன், கடைசியாக ஹீரோ வருவார்கள் என சொன்னார்.  இதை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று ஜீவிதா கூறியுள்ளார்.