திருமணமாகி குழந்தை பெற்றப்பின் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காஜல் அகர்வால்.. மிரண்டு போன ரசிகர்கள்..
Kajal Aggarwal
Tamil Actress
Actress
By Jai
இந்தி, தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி 4 ஆண்டுகள் கழித்து தமிழில் பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால்.
அப்படத்தினை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த காஜல், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல், கோமாளி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அப்படத்திற்கு பின் 2020ல் கெளதம் கிச்சிலு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2022 ஏப்ரலில் ஆண் மகனை பெற்றெடுத்த காஜல் உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.
தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்தும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தியும் வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்து நடிகை காஜல் அகர்வாலா என்று ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.


