என்னுடைய அம்மாகிட்ட அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க.. திடுக்கிடும் தகவலை பகிர்ந்த விஜய் டிவி பிரபலம்
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் பெற்றவர் தான் கல்யாணி.
இவர் சிறுவயதில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
கல்யாணி ரோஹித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட்
சமீபத்தில் பேட்டி அளித்த கல்யாணி சினிமாவில் இருந்து விலகியதற்குக் காரணம் கூறியுள்ளார். அதில் அவர், " நான் 7 வயதிலிருந்து 26 வயது சினிமாவில் நடித்து வந்தேன். ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அப்போது அந்த படத்தின் மேனேஜர் என் அம்மாவிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்கள் என்று கேட்டுள்ளார்".
"அட்ஜஸ்ட்மென்ட் எந்த அர்த்தத்தில் கூறினார் என்று என்னுடைய அம்மா புரிந்து கொள்ளாமல் சரி என்று சொல்லிவிட்டார். கடைசியில் அந்த மேனேஜர் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் இயக்குனர் கூட.. தயாரிப்பாளர் கூட அந்த மாதிரியான விஷயம் என்று சொன்னார். இதைக் கேட்ட அம்மா ஷாக் ஆகி அதிலிருந்து என்னை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்"என கல்யாணி திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.